×

குடிமங்கலம் கொங்கல்நகரம் பகுதியில் நோய் தாக்குதலால் மிளகாய் விளைச்சல் பாதிப்பு-விவசாயிகள் கவலை

உடுமலை : குடிமங்கலம் கொங்கல்நகரம் பகுதியில் நோய் தாக்குதலால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.குடிமங்கலம் ஒன்றியம் கொங்கல்நகரம் பகுதியில் விவசாயிகள் குண்டு மிளகாய் பயிரிட்டுள்ளனர். 6 மாதம் முதல் ஒரு வருடம் வரையிலான மிளகாய் சாகுபடியில், 15 நாட்களுக்கு ஒருமுறை மிளகாய் அறுவடை செய்கின்றனர்.இந்நிலையில், தற்போது நோய் தாக்குதல் காரணமாக செடியிலேயே மிளகாய் பழுத்து அழுகி வருகின்றன. இதனால் உரிய வருமானம் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து விவசாயி கூறியதாவது: நல்ல விளைச்சல் ஏற்படும்போது, அரை ஏக்கரில் 1000 கிலோ வரை மிளகாய் கிடைக்கும். தற்போது நோய் தாக்குததால் மிளகாய்கள் அழுகிவிட்டன. ஒரு வருடம் வரை பலன் தரக்கூடிய செடிகள், 2 மாதத்திலேயே பட்டுப்போனது. கிலோ 30 ரூபாய்க்கு விற்றால்தான் எங்களுக்கு 15 ரூபாயாவது கிடைக்கும். கூலி, உரம், மருந்து எல்லாமே விலை உயர்ந்துவிட்டது. ஆனால், வியாபாரிகள் 18 ரூபாய்க்குதான் வாங்குகின்றனர். இதனால் எங்களுக்கு கட்டுப்படியாகவில்லை. எனவே, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்….

The post குடிமங்கலம் கொங்கல்நகரம் பகுதியில் நோய் தாக்குதலால் மிளகாய் விளைச்சல் பாதிப்பு-விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Chili ,Gudimangalam Konkalnagaram ,Kudimangalam Konkalnagaram ,Kudimangalam Union ,
× RELATED காளான் போண்டா